ஊடகவியலாளர் பிரகாஷின் திருவுருவப்படத்துக்கு சுமந்திரன், சாணக்கியன் அஞ்சலி
கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி அண்மையில் காலமான இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷின் திருவுருவப்படத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோர் இன்று மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.
யாழ். தென்மராட்சி, வெள்ளாம்போக்கட்டியிலுள்ள பிரகாஷின் வீட்டுக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அன்னாரின் திருவுருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து ஆறுதலும் கூறியுள்ளனர்.
மாற்றுத்திறனாளியான இளம் ஊடகவியலாளர் பிரகாஷ் தசையழிவு நோய்த்தாக்கத்தால் சக்கரநாற்காலியின் துணையோடு இயங்கிய நிலையிலும், தனது திறமையாலும் எழுத்தாற்றலாலும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்த ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam