தமிழரசு கட்சிக்காக நீதிமன்றில் வாதாடுவேன்! சுமந்திரன் திட்டவட்டம்
யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இடைக்காலக் கட்டாணைகள் வழங்கப்பட்டுள்ள வழக்குகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் நீதிமன்றங்களில் முன்னிலையாகி அந்த வழக்குகளுக்கு எதிராக வாதாடுவேன். என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகவும், கட்சியின் பொதுக் குழுக் கூட்டங்களின் முடிவுகளுக்கு எதிராகவும், கட்சியின் தலைவர்கள் கேட்டுக் கொண்டால் அவர்களுக்காக நீதிமன்றங்களில் முன்னிலையாகி அந்த வழக்குகளுக்கு எதிராக வாதாடுவேன்."
வழக்கில் எதிராளி
''இந்த வழக்குகள், கட்டாணைகள் குறித்து இன்று காலையிலேயே கொழும்பில் கேள்விப்பட்டேன். திருகோணமலை வழக்கில் என் பெயரும் எதிராளியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக இப்போது அறிந்துள்ளேன்.
ஏனைய எதிராளிகளான எமது கட்சியின் சகாக்கள் கேட்டுக்கொண்டால் அவர்களுக்காகவும் இந்த வழக்கில் முன்னிலையாகி கட்சிக்காக வாதாடுவேன்.'' என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
