யாழ்.நீதிமன்றம் தமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு எதிராக பிறப்பித்துள்ள உத்தரவு
தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி வரை தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடத்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடாத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் முல்லைத்தீவைச் சேர்ந்த பீட்டர் இளஞ்செழியனால் வழக்குதாக்கல் செய்யப்பட்டது.
ஆறு பேருக்கு எதிரான மனு
இதனையடுத்து மனு மீதான விசாரணை இன்று (15.02.2024) எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்குத்தாக்கலானது மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவே செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி குருபரன் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
    
    போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri
 
    
    குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        