திருகோணமலையில் தமிழரசு கட்சியின் மாநாட்டை நடத்த தடை : நீதிமன்றம் உத்தரவு
இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த வேண்டாம் என இடைக்கால தடை விதித்து திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இன்றையதினம் (15.02.2024) எடுத்துக்கொள்ளப்பட்டபோது 14 நாட்களுக்கு செயற்படும் வகையில் மேற் குறித்த இடைக்கால கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் மனுதாரரின் பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவக்குமாருடன் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் மற்றும் சட்டத்தரணி புரந்தன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
கடந்த 21 மற்றும் 27ம் திகதிகளில் நடை பெற்ற பொதுச் சபை கூட்டங்கள் சட்டத்துக்கு முரணானதும், செல்லுபடியற்றது என வாதம் முன்வைக்கப்பட்டது.
இரு வாரங்களுக்கு இடைக்காலை தடை
எனவே குறித்த இரண்டு பொதுச் சபை கூட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகள் சட்டத்திற்கு முரணானதும் செல்லுபடியற்றது எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.
தமிழரசு கட்சியின் அமைப்பு விதி அனுமதிக்கின்ற தொகையை விட அதிகளவான உறுப்பினர்கள் பொதுச் சபை கூட்டங்களில் பங்குபற்றி குறித்த தெளிவுகளின் போது வாக்களித்துள்ளமையினால் குறித்த கூட்டம் சட்டமுரனானது எனவும் இதன் போது நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
குறித்த சமர்ப்பணங்களின் அடிப்படையில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த மாநாட்டிற்கு திருகோணமலையில் மாவட்ட நீதிமன்றம் இரு வாரங்களுக்கு இடைக்காலை தடை உத்தரவு விதித்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி திறந்த நீதிமன்றில் அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கினை திருகோணமலை சாம்பல்தீவு -கோணேஷபுரியைச் சேர்ந்த சந்திரசேகரம் பரா என்பவர் சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவகுமார் ஊடாக தாக்கல் செய்துள்ளார்.
அத்துடன் இந்த வழக்கில் மாவை சேனாதிராஜா,எஸ். ஸ்ரீதரன், எம்.சுமந்திரன், சண்முகம் குகதாசன் உட்பட தமிழரசு கட்சியின் ஏழு முக்கியஸ்தர்கள் எதிர் மனுதாரர்களாக பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தேசிய மாநாட்டுக்கு தடைகோரி யாழ்ப்பாண நீதிமன்றத்திலும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டு குறித்த வழக்கு மீதான விசாரணை தற்போது நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 15 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
