யாழில் இடம்பெற்ற ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Jaffna Northern Province of Sri Lanka Hariharan
By Mayuri Feb 15, 2024 12:00 PM GMT
Report

யாழில் இடம்பெற்ற ஹரிஹரன் இசை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திரக் கொண்டாட்ட நிகழ்வில் ஏற்பட்ட சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரும், NORTHERNUNIஇன் நிறுவுனரான இந்திரகுமார் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரசிகர்களில் தாம் செலுத்திய பணம் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என எண்ணுவோர் அவ்வாறே விட்டு விட, பணத்தினை மீளப் பெற விரும்புபவர்கள் 0777315262 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறும் அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும், இந்திரகுமார் பத்மநாதன் ஆகிய நான் எனது பெரும்பாலான காலப்பகுதியை கனடாவிலே கழித்தது அனைவரும் அறிவீர்கள். எனினும் எனது தாய் மண்ணிற்கும் என் அருமை மக்களுக்கும் எவ்விதத்திலாவது நன்மை புரிய வேண்டும் என்பது எனது நெடுங்காலக் கனவு.

கொழும்பில் சுற்றி திரிந்த மர்ம பெண்: பொலிஸ் விசாரணையில் வெளிவந்த தகவல்

கொழும்பில் சுற்றி திரிந்த மர்ம பெண்: பொலிஸ் விசாரணையில் வெளிவந்த தகவல்

கல்வி வளர்ச்சி

நிதி உதவியோ, பொருள் உதவியோ என்பது சிறிது காலத்திற்கே பயனளிக்கக்கூடியது. என்றுமே அழியாத செல்வம் கல்விச் செல்வம் என்பதை நான் நன்கு அறிவேன். ஏனெனில் அதுவே என் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தது.

எமது மக்களுக்கு குறிப்பாக எம் இளைய தலைமுறையினருக்கு சிறந்த உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கும் நோக்கிலே அமைக்கப்பட்டது NORTHERNUNI ஆகும். எவ்வித சுயலாபத்திற்காகவும் அமைக்கப்பட்டது அல்ல. மற்றும் பட்டப்படிப்பின் பின்னரான தொழில்வாய்ப்புகளுக்காகவும் எம் சமூக இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்காகவும் அமைக்கப்பட்டதே MAGICK TECH நிறுவனம் ஆகும்.

யாழில் இடம்பெற்ற ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு | Announcement For Hariharan Concert Participents

அத்துடன் நின்றுவிடாது பொழுதுபோக்கிலும் அவர்களை மகிழ்விக்க எண்ணி ஏற்பாடு செய்யப்பட்டதே ஹரிஹரன் இசை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திரக் கொண்டாட்டம். முன்னதாக முழுவதுமே இலவச நுழைவு என அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கான ஆசன பகுதியில் தமக்கும் இடம் வேண்டும் என வெளிநாடு முதல் உள்நாடு வரை பலரும் எம்மை தொடர்பு கொண்டதுடன் பணம் செலுத்தி டிக்கட்டினைப் பெறுவதற்கும் தயாராக இருந்தனர்.

இதனை நோக்குகையில் இலவச டிக்கட்டுக்களைப் பெற்று பலர் நின்று பார்க்கும் போது சிலர் மட்டும் இலவச டிக்கட்டுக்களைப் பெற்று ஆசனங்களைப் பெறுவதைத் தவிர்க்கும் முகமாக ஆசனங்களை பகுதி பகுதியாக பிரித்து குறிப்பிட்ட தொகைகளுக்கு கேட்பவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானித்திருத்தாலும் டிக்கட் நுகர்வினை கட்டுப்படுத்தும் நோக்குடனே விலைகள் நிர்ணயிக்கப்பட்டது.

இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு

இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு

டிக்கட் விற்பனை வருமானம்

எனினும் 90 வீதமான ஆசனங்கள் இலவசமாக எமது கல்வி சார் உத்தியோகத்தர்கள், எமது மாணவர்கள் அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் எமக்கு உறுதுணையாக இருக்கும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இவ் டிக்கட்டுக்கள் விற்பனை மூலம் கிடைக்கப்பெறும் நிதியை யாழ். கல்வி மேம்பாட்டு நிதியத்திற்கு (YES – Yarl Education Support Fund) வழங்குவதற்கு தீர்மானித்தோம்.

இவ் நிதியத்தின் ஊடாக வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமது உயர் கல்வியை தடையின்றி பெற்றுக்கொள்ள உறுதுணையாக இருக்கும்.

யாழில் இடம்பெற்ற ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு | Announcement For Hariharan Concert Participents

என் அன்பு மக்களுக்கு நான் எப்பொழுதும் நன்றி கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில் பலதரப்பட்ட போலி பரப்புரைகள் மற்றும் விமர்சனங்கள் வந்த போதிலும் அலைகடலென ஒரு இலட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட இரசிகர்கள், எனது மக்கள் எமக்கும் கலைஞர்களுக்கும் பெரு ஆதரவு அளித்தீர்கள். நல்லதொன்று இருப்பின் என்றும் கெட்டதொன்று இருப்பது வழமையே.

ஆரம்பத்திலே விமானநிலையத்தில் நான் அளித்த பேட்டியொன்றில் கலைஞர்களுக்கு யாழ்ப்பாணத்திற்கு வருவதில் உடன்பாடு இல்லை. நாங்கள் தான் அவர்களை அழைத்து வருகின்றோம் என கூறியது பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்ததும் நான் அறிவேன். அக்கூற்று யாரையேனும் புண்படுத்தும் நோக்கில் கூறப்பட்டது அல்ல. அதற்கான உண்மையான காரணங்கள் பல இருந்தன.

ஆனால் இந்திய கலைஞர்கள் யாழ். வருவது விருப்பமல்ல என்பது அதன் பொருளல்ல. இவ்வாறாக நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே சில வேண்டத்தகாதவர்களால் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ பல தடைகள் மற்றும் போலி விமர்சனங்கள் ஏற்படுத்தப்பட்டன. எனினும் அவை எதையும் பொருட்படுத்தாமல் நிகழ்வானது நாம் எதிர்பார்த்தவாறு மாலை 6 மணிக்கு எமது உள்நாட்டு கலைஞர்களின் வரவேற்பு நடனத்துடன் இனிதே ஆரம்பமானது.

காதலர் தினம் கொண்டாட வராத காதலி: காதலன் எடுத்த விபரீத முடிவு

காதலர் தினம் கொண்டாட வராத காதலி: காதலன் எடுத்த விபரீத முடிவு

இடைநிறுத்தப்பட்ட நிகழ்ச்சி

6:25 மணிக்கு, தமிழா தமிழா நாளை நம் நாடே எனும் பாடலைப் பாடி ஹரிஹரன் மக்களின் மகிழ்ச்சியை உச்சத்திற்கு எடுத்துச் சென்றார். 9:10 மணிவரை மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் குழப்பங்கள் மற்றும் தடங்கல்களை வேண்டுமென ஏற்படுத்தி நிகழ்வினை இடைநிறுத்தும் நோக்கில் உள்நுழைந்த விசமிகளால் சுமார் 15 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது.

யாழில் இடம்பெற்ற ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு | Announcement For Hariharan Concert Participents

எனினும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் நிலைமையானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு மீண்டும் ஆரம்பித்து நாம் திட்டமிட்டவாறு அனைத்து நிகழ்வுகளும் நடாத்தப்பட்டு 12 மணியளவில் நிகழ்வானது நிறைவுபெற்றது. இதன்படி 4 மணித்தியாலங்கள் திட்டமிடப்பட்ட நிகழ்வு இறுதியில் 5 மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்விற்கு 46,055 மக்கள் பதிவுசெய்திருந்த போதிலும், பல எதிர்ப்புக்கள் மற்றும் சதித்திட்டங்கள் இருந்தபோதிலும் மக்களின் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு என்பதற்கிணங்க நிகழ்வின் அன்று இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்திருந்ததே எமக்கும் வருகை தந்த கலைஞர்களுக்கும் பெரு மகிழ்ச்சியாகும்.

NORTHERNUNI ஆனது இவ்வாறானதொரு நிகழ்வினை திட்டமிட்ட வேளையில் அந்நிகழ்வினை நடத்துவதற்கான தேர்ச்சி பெற்ற வல்லுனர்கள் எம்மிடம் இல்லாத காரணத்தினால் இதனை முறையாக அரங்கேற்றுவதற்கு 3ம் நபர் நிகழ்ச்சி முகாமைத்துவ நிறுவனம் ஒன்றை அணுகி அனைத்து பொறுப்புக்களையும் கொடுத்திருந்தோம். இதில் மேடை, ஒலி, ஒளி ஒழுங்கமைப்பு மற்றும் பாதுகாப்பும் உள்ளடங்கலாகும். சில விசமிகளால் இந்நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்பட்டதற்கு மிகவும் மனம் வருந்துகின்றோம்.

சடுதியாக குறைவடைந்த கரட்டின் விலை

சடுதியாக குறைவடைந்த கரட்டின் விலை

எடுக்கப்பட்டுள்ள முடிவு

எனினும் பெருமளவு பாதிப்பு ஏற்படாது அனைவரையும் பாதுகாத்து இந்நிகழ்வு நிறைவடைந்ததற்கு எமது மக்களுக்கும் இறைவனுக்கும் நானும் எனது குடும்பத்தினரும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்நிகழ்வில் ஏற்பட்ட சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளேன்.

யாழில் இடம்பெற்ற ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு | Announcement For Hariharan Concert Participents

தங்களால் செலுத்தப்பட்ட பணம் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்கு பயன்படுத்த எண்ணுவோர் அவ்வாறே விட்டு விட, பணத்தினை மீளப் பெற விரும்புபவர்கள் தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தை - 0777315262 தொடர்பு கொள்ளுங்கள்.

இவ்வாறான முதலீடுகள் மற்றும் நம் மண்ணின் முன்னேற்றத்திற்கான செயற்பாடுகளை ஊக்குவிக்காது அதனை தடுக்கும் முகமாக எமது மக்களுக்கோ மண்ணுக்கோ ஒரு செயலேனும் செய்யாத பகுத்தறிவற்ற சிலர் - விசமிகளை ஏவி விடுதல், அவதூறாக விமர்சித்தல் மற்றும் போலிப் பரப்புரைகளை பரப்புதல் பெரும் மனக்கஷ்டத்தை ஏற்படுத்துகின்றது.

எனினும் எம்மவர்களில் பலர் எமது மண்ணின் முன்னேற்றத்திற்காக பல செயற்பாடுகளை செய்த வண்ணம் உள்ளனர். அவர்களுடன் இணைந்து எவ்வாறான தடைகள் ஏற்படினும் நானும் எனது நிறுவனமும் எப்பொழுதும் எனது மக்களின் நலனுக்காகவும் மண்ணின் முன்னேற்றத்திற்காகவும் பணிபுரிவோம் என உறுதியளிக்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கையில் பண்ணைகளை ஆய்வு செய்த இந்திய நிறுவனம்

இலங்கையில் பண்ணைகளை ஆய்வு செய்த இந்திய நிறுவனம்

GalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, கொழும்பு

30 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
மரண அறிவித்தல்

வவுனியா, Recklinghausen, Germany, Harrow, United Kingdom

26 Oct, 2024
மரண அறிவித்தல்

அராலி, Saerbeck, Germany

26 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்முனை, Palermo, Italy, Reggio Emilia, Italy

04 Oct, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Untersiggenthal, Switzerland

26 Oct, 2024
37ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுருவில், Harrow, United Kingdom

01 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, யாழ்ப்பாணம், கொழும்பு

01 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 2ம் வட்டாரம், Élancourt, France

01 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
மரண அறிவித்தல்

Kapputhoo, கரணவாய் தெற்கு, Scarborough, Canada

27 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கந்தர்மடம், London, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Wembley, United Kingdom, Ilford, United Kingdom

26 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Obwalden, Switzerland

25 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், London, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கொழும்பு, Edmonton, Canada

25 Oct, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், Gaborone, Botswana, Toronto, Canada

25 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US