நினைவேந்தலைத் தடுத்து விட்டு தமிழரிடம் வாக்குக் கேட்டு வராதீர்: சுமந்திரன் காட்டம்

Jaffna M A Sumanthiran Ranil Wickremesinghe
By Rakesh May 14, 2024 05:03 AM GMT
Report
Courtesy: S.P Thas

வடக்கு - கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுத்து விட்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டு வர வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சொல்லிவைக்க விரும்புவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (13.05.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

வாக்கு கேட்டு வரவேண்டாம்

அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சும் நினைவேந்தல் நிகழ்வைப் பொலிஸார் நீதிமன்றக் கட்டளை ஊடாகத் தடுத்துள்ளனர் என்று அறியமுடிகின்றது. நினைவேந்தல்கள் உலக நியமங்களிலே மிக முக்கியமானவை.

ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பான விசாரணை அறிக்கை: உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பான விசாரணை அறிக்கை: உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஆகவே, இதனைத் தடுக்கின்றவர்கள் மிக மோசமான செயல்களிலே ஈடுபடுகின்றார்கள். ஜனாதிபதி ரணிலுக்கு ஒரு செய்தியைச் சொல்லுகின்றோம். அதாவது உங்களது கட்டளையின் பெயரிலே அல்லது உங்கள் அமைச்சர்களின் கட்டளையின் பெயரிலே நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்கின்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுமாக இருந்தால் வரப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் எமது மக்களிடம் வாக்குகளைக் கேட்டு வரவேண்டாம்.

நினைவேந்தலைத் தடுத்து விட்டு தமிழரிடம் வாக்குக் கேட்டு வராதீர்: சுமந்திரன் காட்டம் | Sumandran S Opposition To Ranil

மற்றைய தலைவர்களிடத்திலேயும் நாங்கள் இதனைச் சொல்ல விரும்புகின்றோம். எமது மக்கள் தமக்கு நிகழ்ந்தவற்றை அனுஷ்டிப்பதை அங்கீகரிக்கவில்லை என்றால் இங்கே எமது மக்களின் வாக்குகளைக் கேட்டு வரவேண்டாம் என்பதையும் நாங்கள் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.

இது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போகின்றோம் என்று கூறுபவர்களுக்கு ஆதரவாகக் கூறும் செய்தியல்ல. அது வேறு விடயம். அது சம்பந்தமாக எமது கட்சி (இலங்கைத் தமிழரசுக் கட்சி) எதிர்வரும் 19 ஆம் திகதி கூடி சரியாக ஆராய்ந்து ஒரு தீர்மானத்தை எடுக்கும்.

ஆகவே, அது சம்பந்தமான வேறு விடயங்களை நான் தெரிவிக்க விரும்பவில்லை. ஏற்கனவே எமது கட்சியின் பெருந்தலைவர் (இரா.சம்பந்தன்) தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் அவசரப்பட்டு ஒரு முடிவை எடுத்துவிட வேண்டாம் என்றும் அறிவித்திருக்கின்றார்.

அதற்கு முன்னரும் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒரு பொருத்தமற்ற நடவடிக்கை என்று எமது கட்சியின் பெருந்தலைவர் அறிவித்திருக்கின்றார். நாங்கள் அவருடைய கருத்தையும் ஏனையோருடைய கருத்தையும் சீராக ஆராய்ந்து பொருத்தமான முடிவுக்கு வருவோம்." - என்றார்.

வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியிருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியிருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

தமிழ்ப் பொது வேட்பாளர்

கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் வடக்கு, கிழக்கில் பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் கலந்துரையாடி வருகின்றன. இதற்கான பொது வேட்பாளராக எம்.ஏ. சுமந்திரனை நிறுத்தலாம் என்று பேச்சு எழுந்துள்ளது. அது உண்மையா? உங்களிடம் இது பற்றி கேட்கப்பட்டதா?

நினைவேந்தலைத் தடுத்து விட்டு தமிழரிடம் வாக்குக் கேட்டு வராதீர்: சுமந்திரன் காட்டம் | Sumandran S Opposition To Ranil

பதில்:- "ஆம். உத்தியோகபூர்வமாக அனைவரும் இணைந்து வந்து கோரிக்கையை முன்வைக்கவில்லை. ஆனால், இந்தப் பேச்சு எழுந்த வேளையிலே சுரேஷ் பிரேமச்சந்திரன் என்னிடம் ஒரு தடவை கேட்டிருந்தார். தமிழ்ப் பொது வேட்பாளருக்குப் பொருத்தமானவர் நீங்கள்தான் என்றும், ஒரு சிலரால் இது குறித்து பகிரப்பட்டது என்றும், அது குறித்து எனது நிலைப்பாடு என்ன என்றும் என்னிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டிருந்தார். நான் அப்போதே எனது நிலைப்பாட்டைச் சொல்லியிருந்தேன்.

அப்படியாகத் தமிழ் பொது வேட்பாளராக நான் ஜனாதிபதித் தேர்தலிலே போட்டியிடமாட்டேன். ஜனாதிபதியாக வருவதற்கு ஜனாதிபதி வேட்பாளராக, ஜனாதிபதி பொது வேட்பாளராக, ஜனாதிபதி எதிரணி வேட்பாளராக என்னைக் களமிறங்கச் சொன்னால் அது வேறு விடயம். இந்த நாட்டிலே எந்தச் சமூகத்தவரும், எந்தச் சமயத்தவரும், எந்த மொழியைப் பேசுபவர்களும் ஜனாதிபதியாக வர முடியும். அதற்குப் போட்டியிட முடியும்.

ஆகையினாலே அப்படியான சூழ்நிலையிலே நான் மட்டுமல்ல வேறு யாராவதும் போட்டியிட அழைக்கப்பட்டால் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு. ஆனால், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்கு, ஜனாதிபதித் தேர்தலிலே ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தி அந்த அபிலாஷைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற கருத்துக்கும் எனக்கும் இணக்கம் இல்லை." என்றார்.

பெண்களுக்கு எதிரான பொலிஸாரின் நடவடிக்கை: தேசபந்து தென்னகோன் உத்தரவு

பெண்களுக்கு எதிரான பொலிஸாரின் நடவடிக்கை: தேசபந்து தென்னகோன் உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US