நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட 18 பேருக்கும் பிணை (Video)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட 18 பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 18 பேரும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, சுமார் 6 மணித்தியாலங்களாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதன்பின்னர், சந்தேகநபர்களை சட்ட வைத்திய
அதிகாரியிடம் முற்படுத்தியதை அடுத்து யாழ்ப்பாண மேலதிக நீதவானின் வாசஸ்தலத்தில் நேற்று இரவு, 11 மணியளவில், 18 பேரையும் பொலிஸார் முன்னிலைப்படுத்தினர்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட 18 பேர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணை விண்ணப்பம் செய்திருந்தனர்.
பொலிஸார் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோரின் வாதங்களை கேட்ட மேலதிக நீதவான் 18 பேரையும் தலா 3 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 22ஆம் திகதி வழக்கினை ஒத்திவைத்தார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 மணி நேரம் முன்

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
