யூடியூப் தளம் ஒன்றுக்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ள சுஜீவ
தன்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பியதாகக் கூறி, யூடியூப் தளம் ஒன்றுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், முறைப்பாட்டை அளித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட ஒருவரால் நடத்தப்படும் அந்த யூடியூப் தளம், தனக்கு எதிராக அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தியதாகவும், தனது தனிப்பட்ட மற்றும் தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டதாகவும் மனுதாரர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மனுதாரர், பிரதிவாதியாக கூகுள் நிறுவனத்தையும் குறிப்பிட்டுள்ளார். சுஜீவ சேனசிங்க சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட ஏ8 லேண்ட் க்ரூஸர் வாகனத்தை வைத்திருந்ததாகவும் பயன்படுத்தியதாகவும் யூடியூப் தளம் குற்றம் சுமத்தியிருந்தது.
சட்ட நடவடிக்கை
அத்துடன், அவரை, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தியும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. எனினும் அவை தவறானவை மற்றும் அவதூறானவை என்று சேனசிங்க தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள சேனசிங்க, தவறான தகவல்களுக்கு எதிராக ஒரு முன்னுதாரணத்தை அமைக்கவும், அத்தகைய பொய்யான குற்றச்சாட்டுகளிலிருந்து தனியாட்களை பாதுகாக்கவும், இந்த சட்ட நடவடிக்கையை எடுத்ததாக கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)