பிள்ளைகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!
மனச்சோர்வு மற்றும் பல்வேறு மனநிலை காரணமாக பிள்ளைகளின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டால், பெற்றோர்கள் உடனடியாக மருத்துவர்களிடம் பரிந்துரை செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இலங்கை மனநல மருத்துவ சங்கத்தின் தலைவரும் மருத்துவருமான சஜீவன அமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 8 தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாகுவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கோரிக்கை
தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்களில் இலங்கை உலகில் 21 ஆவது இடத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இலங்கையில் தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் வீதம் இன்னும் அதிகமாகவே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வாயிலாக வெளியிடும் போது அனைத்து தகவல்களையும் உள்ளடங்கியதாக மற்றுமொருவரை தவறான முடிவெடுத்து உயிரிழக்க தூண்டும் வகையில் அவற்றை அறிக்கையிடுவதை தவிர்க்குமாறு வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.