விளையாட்டு சங்கங்களுக்குள் நடந்த பதவி மோசடியை முறியடித்த அநுர அரசாங்கம்!
விளையாட்டு சங்கங்களுக்குள் நடந்த பதவி மோசடியை மாற்றியமைத்துள்ளோம் என்று விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று (08.20.2025) விளையாட்டுத்துறை சம்பந்தமான ஒழுங்கு விதிகள் பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து உயாற்றிய அவர், "விளையாட்டு சங்கங்களின் தலைவர்கள் குறித்த விளையாட்டுத் துறையை விருத்தி செய்வதோடு தங்களின் தரத்தை உயர்த்தி கொண்டதே நடந்துள்ளது.
அரசியல் பலம்
சிலர் விளையாட்டு சங்கங்களின் தலைவர்களாகவே மரணித்துள்ளனர். சில அதிகாரிகள் தங்களின் பலத்தை பயன்படுத்தி 30-40 வருடங்களாக தலைவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் விளையாட்டு வீரர்களின் அபிவிருத்திக்காக எவ்வித செயற்பாட்டையும் செய்திருக்கவில்லை.
மேலும் வெளிநாட்டு பயணங்களில் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான வசதிகளை கூட செய்து கொடுக்கவில்லை என்ற நிலைமையே காணப்பட்டது. குறித்த அதிகாரிகள் தாங்கள் சென்ற நாடுகளில் எங்கே குறைந்த விலையில் பொருட்கள் வாங்கலாம் என்று கேட்டால் சொல்வார்கள் தவிர விளையாட்டுத்துறை தொடர்பில் ஒன்றும் தெரியாது.
இவற்றுக்காகவே ஒழுங்கு விதிகளை நாம் மாற்றியமைக்கிறோம். இலங்கையில் 76 விளையாட்டு சங்கங்கள் விளையாட்டுத்துறை அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் பலவற்றின் நிர்வாகங்கள் சீர்குலைந்தே காணப்படுகிறது.
நாம் இந்த சங்கங்களின் தலைவர்,செயலாளர்,பொருளாளர் பதிகளின் காலத்தை 08 வருடங்கள் வரை திருத்தியுள்ளோம்.மேலும் நிர்வாக குழுவினரின் காலம் 15 வருடங்கள் ஆக்கியுள்ளோம்.
இவ்வாறான செற்பாடுகளில் ஒழுக்கத்தை நிலைநாட்டிய பின்னரே விளையாட்டுத்துறையை நேர் வழியில் செயற்படுத்தலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 17 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri
