பிரான்ஸில் திடீரென மாயமான பெற்றோர் - காணாமல் தவிக்கும் மகள்
பிரான்ஸ் Cantal மாவட்டத்திற்குட்பட்ட பகுதியொன்றில் வசிக்கும் பெற்றோர் திடீரென காணாமல் போயுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
வீட்டில் இருந்த பெற்றோர் கடந்த 10 நாட்களாக காணாமல் போயுள்ள நிலையில் 13 வயதுடைய மகள் அவர்களை தேடி வருகிறார்.
நவம்பர் மாத இறுதியில் ஓரிரு நாட்கள் இடைவெளியில் தாய் மற்றும் தந்தை காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தம்பதிக்கு இடையில் ஏற்பட்ட சிறிய தகராறின் பின்னர் 51 வயதான தந்தை, வாகனம் ஒன்றில் வீட்டை விட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 23ஆம் திகதி 36 வயதுடைய தாய் திடீரென காணாமல் போயுள்ளார். அவர்கள் காணாமல் போனதில் இருந்து இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சிறிய ஆதாரங்களின் உதவியுடன் அவர்களை தேடு பணியை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
“நான் அவர்களைப் பற்றி பேச விரும்பவில்லை, அவர்கள் நல்லவர்கள் அல்ல, அவர்கள் மோசமாக நடந்து கொண்டார்கள்” என காணாமல் போன தம்பதி தொடர்பில் அயலவர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
200 பேர் வசிக்கும் ஒரு பகுதியில் இருந்து இந்த தம்பதி மாத்திரம் காணாமல் போனமை ஆச்சரியமாக உள்ளதென அந்த பகுதி மேயர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பெற்றோரின்றி தனியாக விடப்பட்ட மகள் குறித்தே கவலையாக உள்ளதென மேயர் குறிப்பிட்டுள்ளார். இதனால் சிறுமியை சிறுவர் பராமரிப்பு இலத்தில் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தம்பதி அதிகமான குழப்பங்களை ஏற்படுத்துபவர்கள் என அயலவர்கள் பலர் ஏற்கனவே பொலிஸாரிடம் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர். அந்த பகுதி மக்கள் பலரை சிறுமியின் தந்தை தாக்கியமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அவர்களை கண்டுபிடிப்பதற்கான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிரான்ஸில் வருடத்திற்கு 40ஆயிரம் பேர் வரையில் காணாமல் போவதாக தெரியவந்துள்ளது.

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
