வவுனியா பொதுமக்களுக்கு தொலைபேசி இலக்கம் வழங்கிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு திடீர் இடமாற்றம்
வவுனியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீ.பி.விக்ரமசிங்க அவர்களுக்கே இந்த திடீர் இடமாற்றம்
வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு இவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய பொலிஸ் அத்தியட்சகர்
இவருடைய இடத்திற்கு கொழும்பில் போக்குவரத்து பிரிவு ஒன்றுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அண்மைக்காலமாக வவுனியாவில் பொதுமக்களுக்கு தனது தொலைபேசி இலக்கத்தை வழங்கி அதன் மூலம் பல குற்றச் செயல்களை கட்டுப்படுத்த துரிதமாக செயற்பட்டு வந்த நிலையிலேயே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு இவ் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |