5 வயது பிள்ளையுடன் இருந்தவர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு - அதிகாரிகளை எச்சரித்த ட்ரம்ப்
நியூயோர்க் நகரின் மார்பிள் ஹில் பகுதியில், தனது 5 வயது பிள்ளையுடன் காரில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் மீது அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கப் பிரிவின் அதிகாரி ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், குழந்தையுடன் இருக்கும் நபரிடம் அதிகாரி இவ்வாறு நடந்துக் கொண்டதற்காக கண்டனம் தெரிவித்து போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உயிர்த்தப்பிய 5 வயது பிள்ளை
தாக்குதலுக்கு இலக்கான ஆஸ்கார் பெல்கல் என்ற டொமினிகன் குடியரசைச் சேர்ந்தவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவருடன் காரில் இருந்த 5 வயது பிள்ளை காயங்களின்றி தப்பியுள்ளார். சாதாரண உடையில் வந்த கூட்டாட்சி குடிவரவு அதிகாரிகள், பெல்கலின் காரை வளைத்துத் துப்பாக்கியைக் காட்டியுள்ளனர்.
நியூயோர்க் மேயர் கண்டனம்
இதன்போது அவர் தமது காரை முன்னோக்கி நகர்த்த முயன்றபோது, குறைந்தது 7 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் ஒரு தோட்டா பெல்கலின் இடது காதுக்குக் கீழே பாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை நியூயோர்க் மேயர் சொஹ்ரான் மம்தானி கடுமையாகக் கண்டித்துள்ளார். கூட்டாட்சி குடிவரவு அமைப்பினர் எவ்வித அச்சமுமின்றி தன்னிச்சையாகச் செயல்பட்டு மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகின்றனர். எனவே இந்த அமைப்பை முற்றிலும் கலைக்க வேண்டும் எனக் கோரியுள்ள அவர், நியூயோர்க்கில் கூட்டாட்சி குடிவரவு அதிகாரிகளின் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தக் கோரி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்ப் அரசாங்கத்திற்கு எதிராக வெடிக்கும் போராட்டம்
சம்பவத்தையடுத்து, நியூயோர்க் நகரில் தீவிர போராட்டங்கள் வெடித்துள்ளன. ட்ரம்ப் நிர்வாகத்தின் கடுமையான குடிவரவுக் கொள்கைகள் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாகக் கூறி போராட்டக்காரர்கள் பேரணி நடத்தப்பட்டுள்ளன.
இதன்போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அமெரிக்காவில் கூட்டாட்சி குடிவரவு அமைப்பின் தன்னிச்சையான செயல்பாடுகள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்த சம்பவம் அங்கு மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகிந்தவுக்கு பதிலாக கைது செய்யப்பட்ட ஷிரந்தி! கை விலங்கோடு மக்களிடம் காட்சிப்படுத்த தீர்மானம் - வலுக்கும் எதிர்ப்பு
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan