கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்து வீடு சென்றவர் திடீர் மரணம்
வலப்பனை, உக்குதுலே பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து 20 நாட்களின் பின்னர் வீடு திரும்பியவர் உயிரிழந்துள்ளார்.
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட 45 வயதுடைய குறித்த நபர் கோவிட் தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டது.
அதற்கமைய அவர் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 20 நாட்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
சிகிச்சை பின்னர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்றவில்லை என சுகாதார பிரிவினால் உறுதி செய்யப்பட்டது. எனினும் வைத்தியசாலையில் வீடு திரும்பிய தினத்தன்று மாலை அவர் உயிரிழந்துள்ளார்.
இதனால் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருக்கு செய்யப்படும் இறுதி அஞ்சலி நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய சடலத்தை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 32 நிமிடங்கள் முன்

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
