இலங்கையில் ஏற்படப் போகும் திடீர் மாற்றம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கை கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதென சுகாதார பரிசோதகர்களின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை வைத்தியசாலைகளில் இன்னமும் 20,270 கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதற்கமைய டிசம்பர் மாதம் இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை பாரியளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளதென சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் குலதிலக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் கோவிட் அபாயம் தொடர்ந்து உள்ளமையினால் பிள்ளைகளை சுற்றுலா பயணங்களுக்கு அழைத்து செல்வதனை தவிர்த்து கொள்ளுமாறு கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா, பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, சிகிச்சை பெற வருபவர்கள், தடுப்பூசி பெற்றுக் கொண்டதனை உறுதி செய்யும் அட்டையை கொண்டு வருமாறு தேசிய பல் வைத்தியசாலை பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri