இந்திய முப்படைத் தலைமை தளபதி இறந்த பின் இலங்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் (Video)
பிபின் ராவ் தனது ஓய்வு காலப்பகுதியை அண்மித்த நிலையிலே முப்படைகளின் தளபதியாக பதவி உயர்வு பெற்றிருந்தார். அதிலும் முதலாவது முப்படைத் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்ததன் பின்னர் முதன்முறையாக அண்மையிலேயே இந்த முப்படைத் தளபதி என்ற ஒரு உயர்வை பாரதீய ஜனதா கட்சி அறிவித்திருந்தது என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி மலைப் பகுதி அருகே இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் நாளாந்தம் பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
குறிப்பாக முப்படைத் தளபதி உள்ளடங்களாக பலரின் மரணம் உலகை உலுக்கியது. இதனுடைய பின்புலம் என்ன? இது உண்மையில் ஒரு விபத்தா? இதனுடைய காரணங்கள் இந்திய அரசு மட்டத்தில் எப்படி பகுப்பாய்வு செய்யப்பட்டிருக்கின்றன? உலகில் மிகவும் ஆளுமைமிக்க பகுப்பாய்வு அதிகாரிகளைக் கொண்டிருக்கக் கூடிய இந்தியாவிடம் ஏன் இந்த தாமதம்? இதன் ஊடாக மேலதிகமாக ஏதேனும் அரசியல் செய்தி இருக்கின்றதா என்பது தொடர்பில் தெளிவாக விபரித்துள்ளார்.
மேலும், குறித்த விமான விபத்தில் முப்படைத் தளபதி இறந்த பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மாற்றங்கள், அது கூறும் செய்தி தொடர்பிலும் திபாகரன் எம்மோடு விரிவாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவருடனான முழுமையான செவ்வி இதோ,
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri