சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விதிமுறையை மீறிய சுப்மன் கில்
ஐ.பி.எல் விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் குஜராத் அணி தலைவர் சுப்மன் கில்லுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
குஜராத் அணி
இதையடுத்து 207 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.
இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வியடைந்த குஜராத் அணி குறித்த நேரத்தில் பந்து வீசாமல் தாமதப்படுத்தியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் நடத்தை விதிமுறைகளை மீறும் விதமாக இந்த தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக ஈடுபட்டுள்ளதால், அந்த அணியின் தலைவர் சுப்மன் கில்லுக்கு 12 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam
