இலங்கையில் பரவ தொடங்கியுள்ள ஒமிக்ரோனின் உப திரிபுகள்
ஒமிக்ரோனின் உப திரிபுகள் இலங்கையில் பரவத் தொடங்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கோவிட் பெருந்தொற்றின் திரிபான ஒமிக்ரோன் மிக வேகமாக பரவும் திரிபாக காணப்படுகின்றது.
தற்பொழுது நாட்டில் ஒமிக்ரோனின் உப திரிபுகள் பரவி வருவதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் 75 ஒமிக்ரோன் தொற்று உறுதியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு, அவிசாவளை, பொரலஸ்கமுவ, ஹோமகம, கடுகொட, கொஸ்கம, மெதபாத, பாதுக்க, பாரகடுவ மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய இடங்களில் ஒமிக்ரோன் திரிபுடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வார காலப் பகுதியில் 5391 தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளடன், 87 மரணங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri