சர்வதேச ரீதியில் சிலம்பம் போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு கெளரவிப்பு
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கில் அமைந்துள்ள வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தின் மாணவர்கள் சர்வதேச ரீதியில் சிலம்பம் போட்டியில் சாதித்தமைக்காக கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கௌரவிப்பு நிகழ்வு, இன்று(15) செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது.
இயக்குனர் வேலுப்பிள்ளை தெய்வேந்திரா தலைமையில் காலை மங்கல விளக்கேற்றலுடன் இந்நிகழ்வு ஆரம்பமானது.
சிலம்பாட்ட கலை
அத்துடன், மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்றுவித்த ஆசிரியரான யாழ். மாவட்ட கராத்தே சங்க தலைவரும், கல்வி நிலையத்தின் கராத்தே, சிலம்ப பயிற்றுவிப்பாளருமான க.கமலேந்திரனும் கெளரவிக்கப்பட்டார்.
நிகழ்வின் ஒரு பகுதியாக மாணவர்கள் தங்களுடைய சிலம்பாட்ட கலையை அரங்கில் வெளிப்படுத்தி பலரது பாராட்டுக்களை பெற்றதுடன் சர்வதேச போட்டிகளில் பங்குபெறுவதற்காக பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





