யாழில் தவறான முடிவெடுத்து மாணவி உயிர்மாய்ப்பு!
யாழில் தாயார் படிக்குமாறு கூறியதால் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(17.12.2025) இடம்பெற்றுள்ளது.
வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவியின் தாயார் அந்த மாணவியை பாடங்களை படிக்குமாறு தினமும் கூறுவதால் மாணவி மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகின்றது.

கடந்த 12ஆம் திகதியும் இவ்வாறு தாயார் கூறியதால் குப்பைகளை எரிப்பது போல் பாசாங்கு செய்து பெற்றோலை தன்மீது ஊற்றி தனக்கு தானே தீ பற்ற வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அயல்வீட்டில் உள்ளவர்கள் மாணவியை காப்பாற்றியவேளை குறித்த மாணவி அவர்களுக்கு சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார்.
மரண விசாரணை
பின்னர் தீக்காயங்களுக்குள்ளான அவரை மந்துவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri