வெனிசூலா மீது விரைவில் தரைவழித் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை
வெனிசூலா மீது தரைவழி இராணுவ தாக்குதல் (land strike) “விரைவில்” நடைபெறலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்க வெனிசூலா நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து இதுவரை, வெனிசூலாவுக்கு எதிராக தரைவழித் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என டிரம்ப் குறைந்தது 17 முறை பொதுவெளியில் சுட்டிக்காட்டியுள்ளதாக அமெரிக்க ஊடக பகுப்பாய்வுகள் தெரிவிக்கின்றன.
அந்தப் பகுதியில் காணப்படும் பெரும் இராணுவ நிலைநிறுத்தம் காரணமாக மேலும் வலுவடைந்துள்ளன.

கரீபியன் கடற்பகுதியில் சுமார் 15,000 அமெரிக்க வீரர்கள், பல போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் போதைப்பொருள் கடத்தல் படகுகள் எனக் கூறப்படும் இலக்குகளுக்கு எதிராக குறைந்தது 12 தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த வாரம், வெனிசூலா கரையோரத்தில் கச்சா எண்ணெய் ஏற்றிய டேங்கர் ஒன்றையும் அமெரிக்கா பறிமுதல் செய்தது. வெனிசூலாவுக்கு வருகை தரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் தடைசெய்யப்பட்ட எண்ணெய் டேங்கர்களுக்கு “முழுமையான தடுப்பு” விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். இது வெனிசூலா மீது பொருளாதார அழுத்தத்தை மேலும் அதிகரிக்கிறது.
அமெரிக்க நிர்வாகம், படகுத் தாக்குதல்கள் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை என கூறினாலும், அதன் உண்மையான நோக்கம் வெனிசூலா அதிபர் நிக்கலோஸ் மடுரோவை பதவியிலிருந்து அகற்றுவதே என வெள்ளை மாளிகை தலைமைச் செயலாளர் சூசி வைல்ஸ் அண்மையில் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவ்வாறான இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தங்கள் ஒன்றாக சேர்ந்து, வெனிசூலா தலைநகர் காரக்காஸ்-ஐ பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. டிரம்ப் தனது எச்சரிக்கைகளை உண்மையான நடவடிக்கையாக மாற்றுவாரா என்ற அச்சத்தில் அந்நாடு தயாராகிக் கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam