15 வயதான மாணவன் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்ப்பு
பண்டாரதுவ, மாயதுன்ன பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவன் தனது வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு கொண்டதுடன், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மாணவன் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
15 வயதுடைய இந்த மாணவன் பாடசாலையில் இருந்து வீட்டிற்கு வந்த பின்னர் இவ்வாறு துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவனின் சடலம் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




