மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட பாடசாலை மாணவன்: சந்தேகநபர் தப்பியோட்டம்
பல்லேகல - தும்பர சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் சுகவீனம் காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச்சென்றுள்ளார்.
சந்தேகநபர் நேற்று (04) மாலை 5.00 மணியளவில் வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் பல்லேகல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி அம்பிட்டிய பிரதேசத்தில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவரின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்
இவ்வாறு மாணவனின் உடலுக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் 28 வயதுடைய சந்தேகநபர் அம்பிட்டிய தம்பவெல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடக்குமுறைச் சட்டத்தின் கீழ் பல குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சுகவீனம் காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச்சென்றுள்ளார்.
சந்தேகநபரை மீண்டும் கைது செய்ய அனைத்து பொலிஸாரும் கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தனது மகள் தாராவை வைத்து அடுத்த பிளான் போட்ட கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய புரொமோ Cineulagam
குளிர்காலத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பாருங்க Manithan