கல்முனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவன் : சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Sri Lanka Police Death Kalmunai Sri Lankan Schools
By Farook Sihan Oct 08, 2026 06:49 AM GMT
Report

தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வன்னியார் வீதியிலுள்ள வீடு ஒன்றில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்று வந்த இருதயநாதர் அம்றிதன் (வயது 19) என்ற மாணவன் இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சக பாடசாலை மாணவியுடன்

இச்சம்பவம் குறித்துப் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்முனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவன் : சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு | Student S Body Handed Over To Relatives

குறித்த மாணவன் நள்ளிரவு வரை பாண்டிருப்புப் பகுதியைச் சேர்ந்த தனது காதலியான சக பாடசாலை மாணவியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

அதன் பின்னர், தனது பணப்பையில் இருந்த காதலியின் புகைப்படத்தை அறையில் காட்சிப்படுத்திய மாணவன், தனது கையை வெட்டியுள்ளார்.

இதன்போது ஏற்பட்ட அதிக இரத்தப்போக்குடன், வீட்டின் வெளியில் உள்ள மேல் தளத்தில் தூக்கில் தொங்கியுள்ளார்.

அத்துடன், சத்தம் வெளியில் கேட்காமல் இருப்பதற்காகத் துணியொன்றையும் தனது வாயில் திணித்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

மரணம் சம்பவித்துள்ளது

உயிரிழந்த மாணவன் நான்கு மாதங்களுக்கு முன்னரே தனது தந்தையை இழந்துள்ளார். இவரது தந்தையும் தாயாரும் அரச உத்தியோகத்தர்கள் என்பதுடன், இவருக்கு இரு சகோதரிகளும் உள்ளனர்.

கல்முனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவன் : சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு | Student S Body Handed Over To Relatives

தந்தை மறைந்த சோகத்தில் இருந்து மீளுமுன் இச்சம்பவம் இடம்பெற்றமை குடும்பத்தினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில், கல்முனைத் தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.ஏ.எல். லசந்த களுஆராச்சியின் வேண்டுகோளுக்கிணங்க, திடீர் மரண விசாரணை அதிகாரி முகமட் இப்றாகீம் நஸ்றுல் இஸ்லாம் முன்னிலையில் முதற்கட்ட விசாரணைகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து சடலம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சட்ட மருத்துவ அதிகாரி வைத்தியர் எஸ்.எம். றிபாஸ்டீன் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது கழுத்தில் ஏற்பட்ட இறுக்கம் காரணமாக மூச்சுக்குழாய் தடைப்பட்டு மரணம் சம்பவித்துள்ளமை உறுதி செய்யப்பட்டு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனைத் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

ரணிலின் நெருங்கிய விசுவாசிகளால் சிறையில் ஷிரந்தி

ரணிலின் நெருங்கிய விசுவாசிகளால் சிறையில் ஷிரந்தி

நாம் வெற்றியடைந்துள்ளோம்! கவனத்தை ஈர்க்கும் ஜனாதிபதி அநுரவின் முகநூல் பதிவு

நாம் வெற்றியடைந்துள்ளோம்! கவனத்தை ஈர்க்கும் ஜனாதிபதி அநுரவின் முகநூல் பதிவு

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US