நாம் வெற்றியடைந்துள்ளோம்! கவனத்தை ஈர்க்கும் ஜனாதிபதி அநுரவின் முகநூல் பதிவு

Anura Kumara Dissanayaka Easter Attack Sri Lanka Sri Lanka Government Crime
By Benat Oct 08, 2026 05:27 AM GMT
Report

அரசியலை மக்கள் சேவையாக மாற்றுவதில் நாம் வெற்றிபெற்றுள்ளோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் முகநூல் தளத்தில் இது குறித்து ஒரு பதிவொன்று இடப்பட்டுள்ளது. 

அதில், "வணிகமாக மாறியிருந்த அரசியலை கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்கள் சேவையாக மாற்றுவதில் நாம் வெற்றி அடைந்துள்ளோம்''  என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொதுமக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. 

அந்த நேரத்தில், பொதுமக்கள் எதிர்கொண்ட பொருளாதார மற்றும் சமூக ரீதியான சிக்கல்கள் மற்றும் கடந்த ஆட்சியாளர்களிடம் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவும் தேசிய மக்கள் சக்தி கட்சி ஆட்சிக்கு வருவதற்கு மக்கள் ஆணை வழங்கியிருந்தனர்.

எனினும், ஆட்சியமைத்ததன் பின்னர்  அந்தக் கட்சி முன்வைத்த வாக்குறுதிகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர்.  

தொடர் கைதுகள் 

இதன்படி, நாட்டில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கான தண்டனை,  உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான நீதி,  நாட்டில் அரங்கேறிய பல அரசியல் ரீதியான கொலைகளுக்கான நீதி, போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் தொடர்பான நடவடிக்கைகளை அநுர அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகின்றது. 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒரு சாராரின் வழக்கு விசாரணைகள் நிறைவுபெற்று  அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.  வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்திருந்த பல பாதாள உலகக் குழுத் தலைவர்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  

நாம் வெற்றியடைந்துள்ளோம்! கவனத்தை ஈர்க்கும் ஜனாதிபதி அநுரவின் முகநூல் பதிவு | Anura Kumara Facebook Post

அதேபோல நாடளாவிய ரீதியில் போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு எதிரான நடவடிக்கைககள் எடுக்கப்பட்டு பல கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், இலஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பல முன்னாள் அரசியல்வாதிகள்,  அரச நிறுவனங்களின் முன்னாள் தலைவர்கள், அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்கள் என பலர் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் பலருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.  இவற்றுள் பல முக்கிய அரசியல்வாதிகளும் உள்ளடங்குவர். 

நாம் வெற்றியடைந்துள்ளோம்! கவனத்தை ஈர்க்கும் ஜனாதிபதி அநுரவின் முகநூல் பதிவு | Anura Kumara Facebook Post

இதேவேளை, டித்வா பேரனர்த்தம், மத்தியக் கிழக்கு போர்ச் சூழல் உள்ளிட்ட காரணிகள் காரமணாக பொருளாதார ரீதியான தாக்கத்தை இந்த அரசாங்கம் சந்தித்து வந்தாலும், அவர்கள் வழங்கிய, ஊழல் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயலாற்றுவதை ஓரளவு அவதானிக்க முடிகின்றது.

இந்தநிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இன்றைய முகநூல் பதிவு, அண்மைய கைது நடவடிக்கைகள் மற்றும் அரசியல் ரீதியான சம்பவங்களை அடுத்து அதிக கவனத்தைப் பெறுகின்றது.  

ரணிலின் நெருங்கிய விசுவாசிகளால் சிறையில் ஷிரந்தி

ரணிலின் நெருங்கிய விசுவாசிகளால் சிறையில் ஷிரந்தி

சூடுபிடிக்கும் ஞானசார தேரரின் கைது: ஜனாதிபதிக்கும் மகா சங்கத்தினருக்கும் இடையில் அவசர சந்திப்பு

சூடுபிடிக்கும் ஞானசார தேரரின் கைது: ஜனாதிபதிக்கும் மகா சங்கத்தினருக்கும் இடையில் அவசர சந்திப்பு

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Benat அவரால் எழுதப்பட்டு, 08 October, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US