மாகாண மட்டத்தில் புதிய சாதனையை நிலைநாட்டிய மாணவி
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள போட்டிகளில் 300 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட தட்சனாமருதமடு மகா வித்தியாலய மாணவி புதிய சாதனையை (record break) நிலைநாட்டியுள்ளார்.
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள போட்டிகள் யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் நேற்று (8) இடம்பெற்ற 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 300 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட தட்சனாமருதமடு மகா வித்தியாலய மாணவி யோ.சுடர்மதி புதிய சாதனையை (record break) நிலைநாட்டியுள்ளார்.

2018 ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் மாணவி ஒருவர் குறித்த நிகழ்வினை 51.7 செக்கன்களில் முடித்து சாதனை நிகழ்த்தி இருந்தார்.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் யோ.சுடர்மதி 50.08 செக்கன்களில் ஓடி முடித்து புதிய மாகாண சாதனையை நிலை நாட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பள்ளியில் துப்பாக்கியால் சுட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்; லியோ படம் பார்த்து சுட்டதாக வாக்குமூலம் News Lankasri
Bigg Boss 10: கண்ணீருடன் உள்ளே வந்த முனியம்மாவிற்கு கொடுத்த முத்தம்! வெட்கத்தில் லக்ஷ்மி பிரியா Manithan