மாணவர் கொலை விவகாரம்: பிரித்தானியாவில் வெடித்த வன்முறைப் போராட்டம் குறித்து எழுந்துள்ள கண்டனம்
பிரித்தானியாவில் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 18 வயது வெள்ளை இன மாணவருக்குப் பொலிஸார் கைவிலங்கிட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து சவுத்தாம்ப்டன் நகரில் வெடித்த வன்முறைப் போராட்டங்களுக்குப் பிரித்தானிய உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹென்றி நோவாக் என்ற மாணவர், விக்ரம் திக்வா என்ற சீக்கிய இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டார்.
அப்போது அங்கு வந்த பொலிஸார், கொலையாளியின் பொய் புகாரை நம்பி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நோவாக்கிற்கு கைவிலங்கிட்டனர்.
பொடிகேம் காணொளியில், நோவாக் "என்னை கத்தியால் குத்திவிட்டார்கள், என்னால் மூச்சு விட முடியவில்லை" என்று கதறுவதும், அதற்குப் பொலிஸார் "நீ பொய் சொல்கிறாய்" என்று அலட்சியமாகப் பதிலளிப்பதும் பதிவாகியுள்ளது.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கில் கொலையாளி விக்ரம் திக்வாவிற்கு கடந்த திங்கட்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸாரின் இந்த இனப் பாகுபாடான அணுகுமுறை பிரித்தானிய அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

இதற்கிடையில், இந்தச் சம்பவத்தைக் கண்டித்து சவுத்தாம்ப்டன் துறைமுக நகரில் செவ்வாய்க்கிழமை இரவு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணப் போராட்டங்களைப் போல, இங்கும் "என்னால் மூச்சு விட முடியவில்லை" மற்றும் "அனைத்து உயிர்களும் சமம்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மக்கள் போராடினர்.
அப்போது பொலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 11 பொலிஸார் காயமடைந்தனர். இந்தச் சோகமான சம்பவத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், சிறுபான்மையினருக்கு ஆதரவாகவும், பெரும்பான்மையினருக்கு எதிராகவும் பிரித்தானிய பொலிஸார் "இரட்டை நிலைப்பாடு" கொண்டுள்ளதாக எலான் மஸ்க் மற்றும் வலதுசாரி அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பொலிஸாரின் தற்போதைய செயல்பாட்டு வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்யப் போவதாக பிரித்தானிய தேசிய பொலிஸ் தலைவர்கள் பேரவை தெரிவித்துள்ளது.
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan