ஒரு நாள் கடந்தும் சிகிச்சையளிக்கவில்லை.. மகனை திருப்பி அழைத்து சென்ற தந்தை - வெளியான காணொளி
கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைமுறிந்த சிறுவனுக்கு ஒரு நாள் கடந்தும் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என அச்சிறுவனின் தந்தை கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் முகப்புத்தகத்தில் வெளியிட்ட காணொளி, அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
குறித்த காணொளியில், கடந்த 18ஆம் திகதி சிறுவன் கைமுறிந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறுவனின் தந்தை குறிப்பிடுகின்றார்.
தந்தை வெளியிட்ட காணொளி..
எனினும், ஒரு நாள் கடந்தும் வைத்தியசாலை நிர்வாகம் எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

அதேநேரம், குறித்த வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளிகள் இரத்தப் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை, எக்ஸ்ரே (X-Ray) மற்றும் சிகிச்சையளிக்கப் பயன்படும் பொருட்கள் வரை அனைத்தையும் வெளியிலுள்ள தனியார் மருந்தகங்களிலேயே பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கிண்ணியா வைத்தியசாலையின் இவ்வாறான குறைபாடுகள் குறித்து அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கண்டுகொள்வதில்லை எனப் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
படையெடுப்புக்குத் தயாராகும் அமெரிக்கா... நேருக்கு நேர் போர் என அதிரடியாக அறிவித்த ஈரான் News Lankasri