சிறைக்குள் இலக்கு வைக்கப்படும் சுரேஷ் சலே! சி.டி.விக்ரமரத்னவின் சாட்சிகளை அழிக்கும் மர்ம நபர்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சாட்சிகள் திட்டமிட்டு தவறான முடிவெடுப்பதற்கு மாற்றப்படுவதாக பிரித்தானியாவிலுள்ள ராணுவ ஆய்வாளர் அரூஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர், இதில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் மிக முக்கியமானது.
சிறைக்குள் இருக்கும் சுரேஷ் சலேவுக்கும் இதே போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு சிறை கலவரத்தை உருவாக்கி அவரைத் தாக்குவதோ அல்லது படுகொலை செய்வதோ இலகுவாகச் செய்யப்படலாம்.
மரணமடைந்தவர்கள் எவரும் தவறான முடிவெடுக்கும் மனநிலையில் இல்லை என்றும், அவர்களது மரணங்களுக்கு முன் குடும்பப் பிரச்சனைகள் அல்லது தனிப்பட்ட காரணங்கள் ஊடகங்கள் மூலம் திட்டமிட்டு பரப்பப்படுகின்றது.
அரசியல்வாதிகள் தங்களுக்கு எதிரான சாட்சிகளை அழிப்பதன் மூலம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயல்வதாகவும், இவ்வாறான கொலைகள் ஒரு 'கொலை கலாச்சாரத்தை' மீண்டும் உருவாக்கி விடுமோ என்ற அச்சம் நிலவுகின்றது.
அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் இந்த விசாரணைகளை எவ்வளவு வேகமாக முன்னெடுக்கிறது என்பதில்தான் இந்த வழக்குகளின் வெற்றி தங்கியுள்ளது.
சாட்சிகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால், விசாரணைகள் மர்மமாகவே முடிந்துவிடும் என குறிப்பிட்டார்.
மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..
காலிமுகத்திடலில் அதிரவைத்த கால்பந்து உற்சாகம்! இறுதிப் போட்டியை நேரலையாகக் கண்ட பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள்
ஒரு பூப்புனித நீராட்டு விழாவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் 9 நிமிடங்கள் முன்
படையெடுப்புக்குத் தயாராகும் அமெரிக்கா... நேருக்கு நேர் போர் என அதிரடியாக அறிவித்த ஈரான் News Lankasri
'வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்' பாடலுக்கு நடனமாடிய நடிகை மாளவிகா வா இது! லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ Cineulagam