ஈரான் விவகாரத்தில் தற்போது தரைப்படை அனுப்பத் தேவையில்லை.. ட்ரம்ப் தெரிவிப்பு
ஈரானுடன் பேச்சுவார்த்தை மூலம் சுமுக உடன்பாட்டை எட்டுவதா அல்லது அந்நாட்டின் மீது கடுமையான இராணுவத் தாக்குதலை நடத்துவதா என்ற கடினமான சூழ்நிலையைத் தான் எதிர்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இராணுவத் தாக்குதல்
நியூயோர்க் போஸ்ட் நாளிதழின் 'பாட் ஃபோர்ஸ் ஒன்' போட்காஸ்ட் நேர்காணலில் பேசிய அவர், மனிதாபிமான அடிப்படையில் இந்த விவகாரத்தை சுமுகமான முறையிலேயே கையாள விரும்புவதாகவும், ஆனால் மற்றொரு வழி (இராணுவத் தாக்குதல்) மிகவும் மோசமானதாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஈரானுக்குள் அமெரிக்கத் தரைப்படைகளை இப்போது அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், கடந்த சில நாட்களாக அமெரிக்கா நடத்திய வான்வழித் குண்டுவீச்சுத் தாக்குதல்களிலேயே ஈரானின் பெரும்பான்மையான இராணுவக் கட்டமைப்பு அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார்.
வெறும் மூன்று நாட்களிலேயே அவர்களின் இராணுவம் முற்றிலும் முடக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதாகவும், ஆனால் அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் போன்ற ஊடகங்களைப் படித்தால் ஈரான் ஏதோ பிரமாதமாகச் செயல்படுவது போன்ற தோற்றம் உருவாக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan