குவைத் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி, 60-க்கும் மேற்பட்டோர் காயம்!
குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் நடத்திய அதிரடி டிரோன் தாக்குதலில் இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை "ஈரானின் குற்றவியல் ஆக்கிரமிப்பு" என்று குவைத் பாதுகாப்பு அமைச்சகம் கண்டித்துள்ளது.
மேலும், அங்கிருந்த தூதரக அலுவலகங்களும் இத்தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரான் எண்ணெய் கப்பல் மற்றும் கெஷ்ம் தீவு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை நோக்கி இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்கா தனது தற்காப்புக்காக ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், குவைத் மற்றும் பஹ்ரைனை நோக்கி ஈரான் ஏவிய ஏவுகணைகளைத் தடுத்து அழித்ததாகவும் தெரிவித்திருந்தது.
இந்த திடீர் மோதலால் அமெரிக்கா-ஈரான் இடையே நிலவி வந்த தற்காலிக போர்நிறுத்தம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இத்தாக்குதலில் உயிரிழந்த நபர் இந்தியக் குடிமகன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சசு அறிக்கை வெளியிட்டுள்ளது. குவைத் விமான நிலையத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததோடு, பல இந்தியர்கள் காயமடைந்துள்ளனர்.
இத்தகைய வன்முறைத் தாக்குதல்களை இருதரப்பும் உடனடியாக நிறுத்த வேண்டும்" என அறிக்கயில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து குவைத் அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. குவைத்தில் உள்ள ஈரான் தூதரகத்தின் இரு அதிகாரிகளை 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு குவைத் வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானின் உயர்தரத் தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி ஆகியோருக்கு இடையே போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள சூழலில் இத்தாக்குதல் நடந்துள்ளது.
எனினும், ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்பதற்கு ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள டிரம்ப், பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆனால், அமெரிக்கா தொடர்ந்து புதிய நிபந்தனைகளை விதித்து வருவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் இந்த மோதல் போக்கு, வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan