வெளியில் செல்ல வேண்டாம் - பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெப்ப நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த வகையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொடூர தாக்குதலின் பின்னணியில் முக்கிய சூத்திரதாரியான ராஜபக்ச குடும்பத்தினர்..! அம்பலமாகும் சதித்திட்டம்
இதனால், பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது சில இடங்களில் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை
கடும் வெப்பத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்காக போதுமானளவு தண்ணீர் அருந்துதல், வெப்பமான நேரங்களில் கடுமையான வெளிப்புறச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதாரப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் வெயில் அதிகமாகவுள்ள பகல் நேரப்பகுதியில் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோய்த்தாக்கம் உள்ளவர்கள் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
