காணாமல் போன தமிழ் சிறுவனை கண்டால் அறிவிக்கவும் - தாய் விடுத்த கோரிக்கை
மாத்தளை நகரில் 5 நாட்களுக்கு முன்பு காணாமல் போன தனது 16 வயது மகனைக் கண்டுபிடிக்க சிறுவனின் தாயார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளார்.
முத்தெட்டுதென்ன கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான சுனேத்ரா ஜெயராணி என்பவரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மாத்தளை, முவந்தெனிய கல்லூரியில் படிக்கும் ருவிஷன் என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன மகன்
தாயார் மாத்தளை நகரத்திற்குச் செல்வதாகக் கூறி 19 ஆம் திகதி காலை வீட்டை விட்டுச் சென்று மாலை வீடு திரும்பினார்.
வீடு திரும்பிய போது மகனை காணவில்லை எனவும் 5 நாட்களாகியும் மகனை கண்டுபிடிக்கவில்லை எனவும் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ரத்தோட்ட பொலிஸாரிடம் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.
தாய் கோரிக்கை
அருகிலுள்ள வீட்டில் இருந்த பாதுகாப்பு கேமராவில், மாணவன் ஒரு குடையை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவது பதிவாகியுள்ளது.
காணாமல் போன தனது மகன் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் ரத்தோட்டா பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு குறித்த தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.