மாணவி கிருஷாந்தி படுகொலை! குற்றவாளிகளான முன்னாள் இராணுவ வீரர்களுக்கு நீதிமன்றின் பதில்

Sri Lanka Supreme Court of Sri Lanka Law and Order
By Dharu Jun 03, 2025 12:23 PM GMT
Report

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மாணவி கிருஷாந்தி குமாரசாமி வழக்கில், 1998 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட, குற்றவாளிகளான முன்னாள் இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச உள்ளிட்ட மனுதாரர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உயர் நீதிமன்றின் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு இன்று ஒருமனதாக மனுவை மேல்முறையீடு செய்வதற்கான அனுமதியை மறுத்து தள்ளுபடி செய்துள்ளது

கிருஷாந்தி குமாரசாமி கடத்தல், பாலியல் அத்துமீறல் மற்றும் கொலை வழக்கில் குறித்த ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதித்து 1998 ஆம் ஆண்டு தீர்பளிக்கப்பட்டுள்ளது.


தமிழரசுக் கட்சியை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோரி போராட்டத்திற்கு அழைப்பு

தமிழரசுக் கட்சியை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோரி போராட்டத்திற்கு அழைப்பு

மரண தண்டனை

இந்நிலையில் தங்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாவிட்டால், ஜனாதிபதியின் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் அல்லது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று மனுதாரர்கள் நீதிமன்றில் கோரியுள்ளனர்.

மாணவி கிருஷாந்தி படுகொலை! குற்றவாளிகளான முன்னாள் இராணுவ வீரர்களுக்கு நீதிமன்றின் பதில் | Student Krishanthi Kumaraswamy Case

தங்கள் சமர்ப்பிப்புகளில், மரண தண்டனை என்ற பேரில் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பது கொடூரமானது என்றும், மனிதாபிமானமற்றது என்றும், இதன் மூலம் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

இதற்கமைய சிறைச்சாலை ஆணையர்  நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையான மூத்த துணை சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க, பல ஆரம்ப ஆட்சேபனைகளை இதன்போது எழுப்பியுள்ளனர்.

சட்டமா அதிபர் எழுப்பிய முக்கிய ஆட்சேபனைகளில், ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது ஜனாதிபதியின் விருப்பப்படி மட்டுமே உள்ளது என்றும், எந்தவொரு குற்றவாளியும் அதை சட்டப்பூர்வ உரிமையாகவோ அல்லது உரிமையாகவோ கோர முடியாது என்றும் கூறியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளருக்கு 'மொட்டு' ஆதரவு வழங்காது: சாகர தெரிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளருக்கு 'மொட்டு' ஆதரவு வழங்காது: சாகர தெரிவிப்பு

கிருஷாந்தி குமாரசாமி

இதன்படி விண்ணப்பம் காலக்கெடுவுக்கு உட்பட்டது என்றும் மனுதாரர்கள் சுத்தமான கைகளுடன் நீதிமன்றத்தை அணுகத் தவறிவிட்டனர் என்றும் சட்டமா அதிபர் வாதிட்டுள்ளார்.

மாணவி கிருஷாந்தி படுகொலை! குற்றவாளிகளான முன்னாள் இராணுவ வீரர்களுக்கு நீதிமன்றின் பதில் | Student Krishanthi Kumaraswamy Case

இந்நிலையில் நீதியரசர்களான குமுதினி விக்ரமசிங்க, அச்சலா வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தரா ஆகியோர்  கொண்ட அமர்வு இந்த ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்டு அதன்படி மனுவை தள்ளுபடி செய்ய முடிவு செய்தது.

1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ காவலரணில் வழிமறித்த இராணுவத்தினர் பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தி கழுத்தை நெரித்துபடுகொலை செய்திருந்தனர்.

செம்மணி இராணுவ காவலரணில் கிருஷாந்தியை தடுத்து வைத்திருந்ததை ஊரவர்கள் கண்ணுற்று மாணவியின் தாயாரிடம் கூறியதை அடுத்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா (வயது 59) மாணவியின் சகோதரனான யாழ்.பரியோவான் கல்லூரி மாணவனான குமாரசாமி பிரணவன் (வயது 16) மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய சிதம்பரம் கிருபாமூர்த்தி (வயது 35 ) ஆகியோர் மாணவியை தேடி சென்று செம்மணி இராணுவ காவலரணில் விசாரித்த வேளை அவர்கள் மூவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்திருந்தனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தரப்புக்கு மரண தண்டனையை அப்போதைய உயர் நீதிமன்றின் ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்வு,  உறுதி செய்து அவர்களின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி...!

யாழ். மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி...!

கோப் குழு விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக மோசடி

கோப் குழு விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக மோசடி

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்கேணி, Bunde, Germany

24 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, காரைநகர் களபூமி, கொழும்பு, கனடா, Canada

24 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US