சாரதி அனுமதிபத்திரம் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய மாணவன் விபத்து
கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(26.02.2026) இடம்பெற்றுள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சிறு காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
மோட்டார் சைக்கிளை செலுத்திய மாணவன், தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை எழுதி முடித்து வீட்டுக்கு வந்த பின்னர், மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு கடைக்கு சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவனுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்று கிளிநொச்சி போக்குவரத்து பொலிசார் விசாரணைகளின் பின்னர் தெரிவித்துள்ளனர்.