வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் பௌத்த தேரரும் பங்கேற்பு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது நீதி கோரிய போராட்டமானது பௌத்த தேரரொருவரின் பங்கெடுப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகோரி சற்றுமுன் கிளிநொச்சியில் போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம் 07 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
A9 வீதி ஊடாக பேரணி
இந்த போராட்டமானது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகி டிப்போ சந்தி நோக்கி A9 வீதி ஊடாக பேரணியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் சமயத் தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 5 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
