அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராடுவோம்! சிவாஜிலிங்கம் எச்சரிக்கை
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை ஆட்சியாளர்கள் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் வடக்கு, கிழக்கை ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய ஒரு அறவழிப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நெல்லியடி பொதுச் சந்தை முன்பதாக நேற்று முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகிந்த ராஜபக்ச காலம்
''நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தொடர்ந்து ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாமல் காணப்படுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலம் தொடக்கம் இன்றுவரை அது நீண்டுகொண்டே இருக்கின்றது.
நல்லாட்சி என்று வந்த நாசமாய் போன ஆட்சியிலும் அரசியல் கைதிகளுக்கு எந்தவிதமான தீர்வையும் பெற்றுக்கொடுக்காதவர்கள்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதையோ வெட்டி வீழ்த்தப்போகின்றார் என்று ஆதரவு கொடுத்தவர்கள், சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் என எல்லோருமே அரசியல் கைதிகள் விடயத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது வேதனைக்குரிய விடயம். இலங்கை வரலாற்றில் ஆயுதப் புரட்சியை ஏற்படுத்திய ஜே.வி.பியினருக்கு இரு தடைவைகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது’’ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
