கத்திக்குத்துக்கு இலக்காகி பலியான இளைஞனுக்கு நீதிகோரி கிளிநொச்சியில் வீதிக்கிறங்கிய மக்கள்
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரமந்தனாற்று பகுதியில் கத்திக்குத்திற்கு இலக்காகி உயிரிழந்த குடும்பஸ்தருக்கு நீதிகோரியும் கைதான சந்தேக நபருக்கு பிணை வழங்கவேண்டாம் என வலியுறுத்தியும் கிராம மக்கள் பேராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 04.04.2024 அன்று கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலத்தில் இடம்பெற்ற விளையாட்டு போட்டியினை பார்வையிட்டுவிட்டு திரும்பி சென்ற போது வீதியில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தில் மயில்வாகனபுரம் பிரமந்தனாற்றினை சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தரான சவரிமுத்து ஜோன்பற்றிஸ் என்பவர் கத்திக்குத்து தாக்குதலால் உயிரிழந்துள்ளார்.
விளக்கமறியல் உத்தரவு
இந்த சம்பவ் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை தர்மபுரம் பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதந்தனாறு,மயில்வாகனபுரம்,கல்லாறு போன்ற பகுதிகளில் இடம்பெறும் வன்முறைகளை கட்டுப்படுத்தக்கோரியும் உயிரிழந்த குடும்பஸ்தருக்கு நீதிகோரியும் கிராம மக்கள் நெத்தலியாறு பாலத்தில் இருந்து கவனயீர்ப்பாக தர்மபுரம் பொலிஸ் நிலையம் வரை சென்று பொலிஸாருக்கும்,சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் மனு ஒன்றினை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்துள்ளார்கள்.
குறித்த குற்றவாளிக்கு கடூழிய தண்டனை வழங்கு, பிணைவழங்காதே, பிள்ளைகளின் உயிர்களை பாதுகாக்கவேண்டும் போன்ற பதாதைகளை தாங்கியவாறு கிராம மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |