பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்!
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி ஆகிய செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின் பணிப்பகிஸ்கரிப்பு இரண்டாவது நாளான இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எரிபொருள் வழங்கப்படாமையால் கடமைகளை மேற்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்வதாகவும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு எரிபொருளை வழங்குமாறு கோரியும், அத்தோடு அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்களுக்குள் சமுர்த்தி உத்தியோகத்தர்களையும் உள்வாங்குமாறு கோரியும் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
பிரச்சினைகள்
அந்த வகையில் வாழைச்சேனை, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி ஆகிய செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி திணைக்கள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இரண்டாவது நாளாகவும் கடமைக்கு சமூகம் வழங்காத நிலையில் சமுர்த்தி வங்கிகள், சமுர்த்தி மகாசங்கத்தின் கிளைகள் என்பன மூடிக் காணப்படுகன்றன.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாததால் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் விஷேட கொடுப்பனவு வழங்குவதிலும் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.










ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 29 நிமிடங்கள் முன்

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri
