குருநாகல் போதனா வைத்தியசாலையில் மருந்தாளுநர்கள் சங்கம் அடையாள வேலைநிறுத்தம்
குருநாகல் போதனா வைத்தியசாலையில் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தகுதியற்ற மருந்து கலவை நிபுணரை வைத்தியசாலைக்கு நியமித்ததற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த அடையாள வேலைநிறுத்தம் இன்று(13) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
அதிகாரிகளின் புறக்கணிப்பு
தகுதிவாய்ந்த மருந்தாளுநர்கள் தங்கள் சேவைகளை வழங்கும் போது, சேவை அவசியமின்றி ஒரு மருந்து கலவை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு இரண்டு முறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் திலகரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், அதிகாரிகள் இந்த விடயத்தை புறக்கணித்ததன் காரணமாக இவ்வாறு அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam