தென் அமெரிக்க நாடொன்றில் அவசரநிலை பிரகடனம்
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி காணாமல் போனதால், அவர் இறந்துவிட்டதாக கருதி அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அடுத்து அந்நாட்டு ஜனாதிபதி டேனியல் நோபோவா, இரண்டு மாதங்களுக்கு அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
குவாயாகில் சிறையில் அடைக்கப்ட்டிருந்த குற்றவாளி அடோல்போ மசியாஸ் என்பவர் காணாமல் போனாரா அல்லது தப்பிச் சென்றாரா என்ற விவரம் தெரியாத நிலையில், சிறைச்சாலைகளில் கலவரம் வெடித்துள்ளது.
துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல்
தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் நேரலை செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்த அரங்குக்குள் நுழைந்த முகமூடி அணிந்த கும்பல், ஊழியர்களை துப்பாக்கி முனையில் பணயக் கைதிகளாகப் பிடித்தது.
The police arresting the terrorists who took #journalists hostage in an #Equador TV station.
— Cpt.Llama ?? ?? ?? ?? ? (@CaptainLlama15) January 10, 2024
pic.twitter.com/hI3gguxHko
அப்போது ஊழியர்கள் சுடாதீர்கள் என்று கெஞ்சும் காணொளியும் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனிடையே, நிலைமை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக ஈக்வடார் அரசு கூறியுள்ளது.
இதேவேளை தொலைகாட்சி நிலையத்திற்குள் நுழைந்த கும்பலை கைது செய்ததாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
