சரித்திரம் காணாத மாபெரும் ஆர்ப்பாட்டம் நாளை: ஜனாதிபதி மற்றும் பிரதமர் வெளியேறும் நேரம் வந்துவிட்டதாக அறிவிப்பு
ஜனாதிபதி பதவிவிலகவேண்டும் என்பதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்காக நாளை முதல் ஐக்கிய மக்கள் சக்தி வீதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சரித்திரத்தில்லாத மிகப்பெரிய ஆர்ப்பாட்ட பேரணி நாளை கண்டியில் ஆரம்பமாகும்என அவர் தெரிவித்துள்ளார்.
தலதா மாளிகையில் வழிபாடு செய்த பின்னர் நாங்கள் ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பிப்போம் மே முதலாம் திகதி கொழும்பை வந்தடைவோம் என ஹரீன்பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவியிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டாலும் சிறையில் அடைக்கப்பட்டாலும் நாங்கள் ஆர்ப்பாட்டங்களை தொடர்வோம் என அவர்தெரிவித்துள்ளார்.



