ட்ரம்பின் அதிரடி எச்சரிக்கை! உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்படுத்தியுள்ள பெரும் பரபரப்பு
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் ஒத்துழைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், மிக விரைவில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என்று அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா
வளைகுடா பகுதியை மீண்டும் திறக்க திட்டம்
வளைகுடாப் பகுதியை மீண்டும் திறக்க மற்ற நாடுகளும் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும், கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் 'சுங்கச்சாவடி' (Tollbooth) போன்ற கட்டண முறையை விதிப்பதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஈரானின் அணுஆயுதத்திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே அமைதி உடன்படிக்கையின் 99 சதவீத நோக்கம் என்றும், அது நிறைவேறினால் நீரிணை தானாகவே திறக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து இன்னும் ஸ்தம்பித்துப் போயுள்ளது.
போர் தொடங்குவதற்கு முன்பு நாளொன்றுக்கு சுமார் 135 கப்பல்கள் பயணித்த நிலையில், போர் நிறுத்தத்திற்குப் பிறகு வெறும் 22 கப்பல்கள் மட்டுமே இந்த நீரிணையைக் கடந்துள்ளன.
தேங்கியுள்ள கப்பல்கள்
எண்ணெய் டாங்கர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட கப்பல்கள் வளைகுடாப் பகுதியில் தேங்கிக் கிடக்கின்றன.

ஈரான் தனக்குச் சாதகமான மற்றும் மனிதாபிமான உதவி கோரும் கப்பல்களை மட்டுமே அனுமதிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சிக்கலான சூழலில், நிரந்தர அமைதி உடன்படிக்கையை எட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் பாகிஸ்தானில் ஈரானியப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் தீவிர வெப்பநிலை..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam