ஈரானின் முடிவு தொடர்பில் அமெரிக்கா சீனாவிடம் விடுத்துள்ள கோரிக்கை!
ஹார்முஸ் நீரிணையை மூட வேண்டாம் என்று ஈரானை வலியுறுத்துமாறு, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ சீனாவிடம் கோரியுள்ளார்.
ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது வோசிங்டன் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து, ஹார்முஸ் நீரிணையை மூடப்போவதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை
அத்துடன், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் பங்களிப்பை கொண்டுள்ள ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கான நடவடிக்கைக்கு ஈரானிய நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்ததாக ஈரானின் பிரஸ் டிவி, செய்தி வெளியிட்டிருந்தது.
இதனையடுத்தே ரூபியோ சீனாவிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடினால், அந்த நாடு மேற்கொள்ளும் மற்றொரு பயங்கரமான தவறாக இருப்பதுடன் அந்த நாட்டுக்கு பொருளாதார தற்கொலையாகவே அமையும் என்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
எனினும் வோசிங்டனில் உள்ள சீனத் தூதரகம், அமெரிக்க இராஜாங்க செயலாளரின் கோரிக்கை குறித்து உடனடியாக கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, 14 பதுங்கு குழி குண்டுகள், இருபத்து நான்கு டோமாஹாக் ஏவுகணைகள் மற்றும் 125 க்கும் மேற்பட்ட இராணுவ விமானங்களைப் பயன்படுத்தி, ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்களை தாம் அழித்துவிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் உரிமைக் கோரியிருந்தனர்.
எனினும் இந்த தாக்குதலின் பின்விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்று ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
