இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு இந்தியா வழங்கும் சலுகை
இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜோர்தானின் அம்மானில் இருந்து இந்தியாவின் புதுடில்லிக்கு இயக்கப்படும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களில் இலங்கைக்குப் பயணிக்க விரும்புவோருக்கு, குறைந்த எண்ணிக்கையிலான இருக்கைகளை வழங்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் ஒரு அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த வாய்ப்பைப் பயன்படுத்த ஆர்வமுள்ள இலங்கையர்கள் பதிவு செய்ய இலங்கை தூதரகத்தை நாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏற்பாடுகளின்படி, டெல் அவிவிலிருந்து ஜோர்தானின் அம்மானுக்கு இலவச போக்குவரத்து வழங்கப்படும், அத்துடன், அம்மானில் இருந்து புதுடில்லிக்கான விமானப் பயணத்துக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தூதரகத்தின் அறிவிப்பு
எனினும், புதுடில்லியில் இருந்து கொழும்புக்கு செல்லும் விமானத்திற்கான பயணிகள் தங்கள் சொந்த அனுமதிச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த பதிவுகள் 2025 ஜூன் 23 மற்றும் 24, 2025 ஆகிய திகதிகளில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 23 மணி நேரம் முன்
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan