அகமதாபாத் விமான விபத்துக்கு காரணமான விதிமீறல்கள்..! அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை
ஏர் இந்தியா நிறுவனத்தில் விதிமீறல்கள் இடம்பெற்றுள்ளமையை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த நிறுவனத்தின் வருகைப் பதிவேடு, பணிப்பதிவேடு மற்றும் செயற்பாட்டு அறிக்கைகளை ஆய்வு செய்வததிலேயே விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் பெங்களூரில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தின் விமானிகள் தொடர்ச்சியாக 10 மணிநேரம் கடமையாற்ற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால், விமான விதிப்படி, ஒரு விமானியை 10 மணிநேரத்திற்கும் அதிகமாக விமானம் ஓட்ட கட்டாயப்படுத்தக் கூடாது.
விதிமீறல்கள்
இந்நிலையில், இது தொடர்பான விளக்கத்தை கேட்டு ஏர் இந்தியாவுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(DGCA) அறிவிப்பொன்றை அனுப்பியுள்ளது.
அத்துடன், பணியில் அலட்சியமாக செயற்பட்ட 3 விமான அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் அபராதம் மற்றும் விமான உரிமம் இரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என DGCA எச்சரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 19 மணி நேரம் முன்

குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam

பாரிஜாதம் சீரியலை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதிய தொடர்... திருமாங்கல்யம், முதல் புரொமோ Cineulagam
