இராணுவத்திற்குள் தனிப்பட்ட பழிவாங்கல்கள்: அளிக்கப்பட்ட விளக்கம்
இலங்கை இராணுவத்திற்குள் தனிப்பட்ட பழிவாங்கல்கள் நடைபெறுவதாக அண்மைக்காலமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இராணுவத் தலைமையகம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக இராணுவத் தலைமையகம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இராணுவத் தளபதி அண்மையில் போலியான ஆவணங்களின் அடிப்படையில் இராணுவத்தின் அதிகாரிகள் சிலரை இராணுவத்தில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாகவும், இன்னும் சிலரை இடைநிறுத்த முயற்சிப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் அண்மைக்காலமாக சில பதிவுகள் பரவிக் கொண்டிருக்கின்றது.
பொய்ப் பிரசாரம்
இராணுவத்திற்குள் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பதுடன், இது போலியான தகவல் ஆகும்.

அத்துடன், இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காக மூன்றாம் தரப்பு ஒன்றின் பின்னணியில் இந்தப் பொய்ப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவம் இராணுவத் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 3 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam