ஈரானில் கட்டளை அதிகாரம் யாரிடம் உள்ளது..! அபாய நிலை குறித்து பிரித்தானிய முன்னாள் தளபதி எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் இராணுவப் பதற்றத்தைத் தணித்து, அங்கு மீண்டும் அமைதியான சூழலை உருவாக்குவது என்பது பரஸ்பரம் பகையுள்ள நாடுகளுக்கு இடையே நம்பிக்கையை வளர்ப்பது மற்றும் சிக்கலான ஒருங்கிணைப்பைச் சார்ந்தது என பிரித்தானிய இராணுவத்தின் ஓய்வுபெற்ற ஜெனரல் சைமன் மயால் தெரிவித்துள்ளார்.
ஈரானில் தற்போது கட்டளை அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதில் தெளிவற்ற நிலை நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஈரானிய தீவிரப் போக்குடையவர்கள் அமைதித் தீர்வை விரும்பாது இருப்பதற்கான அபாயம் எப்போதும் உள்ளதாக ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் எச்சரித்துள்ளார்.
வெளிநாட்டுப் பார்வையாளர்கள் நியமிப்பு
வெற்றிகரமான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கள நிலவரத்தைக் கண்காணிக்க ஏராளமான வெளிநாட்டுப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும், அதன் பின்னரே நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையைச் சோதிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் மீண்டும் வன்முறை வெடிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், தகுந்த பாதுகாப்பு உத்தரவாதம் இன்றி சிவிலியன் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் இந்தப் பாதையைப் பயன்படுத்த மிகவும் தயங்குவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
படிப்படியான அணுகுமுறைகள் மற்றும் உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலமே இந்தப் பகுதியில் மீண்டும் இயல்பு நிலையை மீட்டெடுக்க முடியும் என்பது அவரது கருத்தாக உள்ளது.
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam