சுரேஷ் சலே சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டாரா! மருத்துவ அறிக்கையில் வெளியான தகவல்
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் துவான் சுரேஷ் சலே சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக ஐந்து பேர் கொண்ட விசேட நிபுணத்துவ மனநல மருத்துவக் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
300க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட குறித்த விசேட மருத்துவ அறிக்கை இன்று (25) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த அறிக்கை தொடர்பான விடயங்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
மேலும், அஹுங்கல்ல RIU ஹோட்டலில் அறைகளை முன்பதிவு செய்து சுரேஷ் சலேவின் குடும்பத்தினரும், மௌலானாவின் குடும்பத்தினரும் தங்கியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த அறைகளை முன்பதிவு செய்தமை தொடர்பான கடன் அட்டை (Credit Card) விபரங்கள் உள்ளிட்ட பல தகவல்களும் இன்று (25) நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri