ஆர்ஜென்டினாவில் இடிந்து விழுந்த விளையாட்டுக் கழக மேற்கூரை: 13 பேர் பரிதாபகரமாக உயிரிழப்பு
ஆர்ஜென்டினாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த புயலால் விளையாட்டுக் கழக மேற்கூரை இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் இன்று (17.12.2023) அர்ஜென்டினாவின் பஹியா பிளாங்கா நகரில் ஏற்பட்டுள்ளது.
கனமழை மற்றும் காற்று
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அர்ஜென்டினாவின் பஹியா பிளாங்கா நகரில் நகரத்தில் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியுள்ளது.
கனமழை மற்றும் காற்று ஸ்கேட்டிங் போட்டி நடைபெறும் மைதானத்தின் மேற்கூரையை இடித்து வீழ்த்தியுள்ளது.
இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இடிபாடுகளில் சிக்கிய மக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுளள்ன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
